Chinna Chinna Gnanangal / சின்ன சின்ன ஞானங்கள்
-
₹150
- SKU: THA015
- Translator: Yuma Vasuki
- Author: Nithya Chaithanya Yathi
- Language: Tamil
- Pages: 136
- Availability: In Stock
நாராயண குருவின் வழித்தோன்றலான குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் குழந்தைகளை மையமிட்டு மலையாளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். எழுத்தாளுமை யூமா வாசுகி அவர்களால் இந்நூல் முதன்முதலில் தமிழுக்கு அறிமுகமாகிறது. இதிலுள்ள ஒவ்வொரு கருத்துகளும், அனுபவங்களும் தன்னளவில் ஒவ்வொரு ஞானங்கள். கோட்பாடுகளின்படி அல்லாது இயல்பாய் குழந்தைகளின் வாழ்வுப்போக்கில் அமைந்த சில தரிசனத் தருணங்களை இந்நூல் வழியாக நமக்கு வெளிச்சப்படுத்தி உருப்பெருக்கிக் காட்டித்தருகிறார் யதி. தன்னறம் நூல்வெளி தமிழில் இந்நூலை அச்சுப்படுத்தி வெளியிடும் வாய்ப்புக்குத் துணைநின்று, இந்நூலை தன்னுடைய சில கூடுதல் குறிப்புத்தகவல்களுடன் மொழிபெயர்த்துத் தந்திட்ட எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களுக்கு எக்காலத்தும் தீராநன்றிகள். அப்பா, அம்மா, ஆசிரியர், வளர்ந்தோர் என குழந்தைகளின் அகவுலகத்தை அறியவிரும்பும் அனைவருக்கும் இந்நூல் நிச்சயம் வாசிப்புநிறைவையும் அறிதலமைதியையும் அளிக்கும். இளையோர் இலக்கிய நூல்வரிசையில் இந்நூலும் தன்னை அமர்த்தி, சிறாருலகத்தின் சின்னச் சின்ன ஞானங்களை எல்லோருக்கும் எடுத்தளிக்கும். வருகிற ஏப்ரல் 14 அன்று, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நிகழும் ‘கல்லெழும் விதை’ நிகழ்வுதனில் இந்நூல் வெளியீடு அடையவுள்ளது. குழந்தைகள் யதிக்கு அளித்த ‘சின்னவைகளின் ஞானத்தை’ யூமா வழியாக நாமும் அடைய, இந்நூல் நிச்சயம் ஒரு சிறுபாதையை மலையுச்சிநோக்கி திறக்கும்.




